புதுச்சேரி

பா.ஜனதா நிர்வாகி கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் நமச்சிவாயத்துக்கு ஆளுயர மாலை அணிவித்த போது எடுத்த படம்.

விரைவில் இலவச மனைப்பட்டா-அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

Published On 2023-03-06 12:13 IST   |   Update On 2023-03-06 12:13:00 IST
  • தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.
  • எல்லா திட்டங்களையும் இத்தொகு தியில் கொண்டுவர வேண்டும். அதற்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம்.

புதுச்சேரி:

மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் திருக்கனூரில் நடந்தது. மண்டல பொறுப்பாளர் கண்ணன், தலைவர் வேதாச்சலம் தலைமை வகித்தனர். தொகுதி பொதுச்செயலாளர் முருகன் வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது: -

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். மண்ணாடிப்பட்டு பின்தங்கிய தொகுதியாக இருந்தது. இதை மாற்ற ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.

சாலை, குடிநீர், மக்கள் நலத்திட்டங்களை உடனுக்குடன் வழங்கி வருகிறோம். எல்லா திட்டங்களையும் இத்தொகு தியில் கொண்டுவர வேண்டும். அதற்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம்.

இலவசமனைப்பட்டா விரைவில் வழங்கப்படும். எந்தெந்த பகுதியில் மனைப்பட்டா வழங்கப்படாமல் உள்ளதோ அப்பகுதியில் தகுதியான வர்களுக்கு மனைப்பட்டா வழங்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட தலைவர் அனந்தன், பொதுச்செயலாளர் திருவேங்கடம், நிர்வாகிகள் வீரராகவன், தமிழ்மணி, செல்வகுமார், சையது, சீனுவாசமூர்த்தி, கலியபெருமாள், ராஜா, சிவா உட்பட பலர் கலந்துகொண்டனர். மகளிர் அணி நிர்வாகி அனுசுயா நன்றி கூறினார்.

Tags:    

Similar News