புதுச்சேரி

கோப்பு படம்.

உயர்கல்வி படிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச லேப்டாப்

Published On 2023-06-02 09:23 GMT   |   Update On 2023-06-02 09:23 GMT
  • பராமரிப்பு செலவு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • மாற்றுத்திறனாளி மாணவ, மணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்குப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் இளநிலை, முதுநிலை கல்வி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த புதிய திட்டத்துக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து கவர்னர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பட்ஜெட்டில் அறிவித்த படி எந்திரமயமாக்கல், கடல் மீன்பிடி தொழிலை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகளுக்கு வழங்கிவரும் பராமரிப்பு செலவு ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்கும் ஆணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கண்ணாடி நுண்ணிழை, கட்டுவலை விசைப்படகுகளுக்கு பராமரிப்பு செலவு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இளநிலை, முதுநிலை கல்வி பயிலும் பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் அரசின் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வழி முறைகள் வகுத்து அரசாணை வெளியிடும் கோப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News