புதுச்சேரி

முதியோர் இல்லத்தில் இலவச பல் சிகிச்சை முகாம் நடந்த போது எடுத்த படம்.

முதியோர்களுக்கு இலவச பல் சிகிச்சை முகாம்

Published On 2023-10-24 14:15 IST   |   Update On 2023-10-24 14:15:00 IST
  • பல் மருத்துவ சிகிச்சை முகாமை புதுச்சேரி மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் நடத்தியது.
  • டாக்டர் மனோகர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

புதுச்சேரி:

பிள்ளையார்குப்பம் ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான இந்திரா காந்தி பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பல் கட்டும் பிரிவு மற்றும் புதுச்சேரி ரோட்டரி ஆரோசிட்டி இணைந்து, முதியோர்களுக்கான பல் மருத்துவ சிகிச்சை முகாமை புதுச்சேரி மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் நடத்தியது.

முகாமுக்கு இந்திரா காந்தி பல் மருத்துவ கல்லுாரி முதல்வர் டாக்டர் அருணா ஷர்மா, பல் மருத்துவ பிரிவு துறை தலைவர் மற்றும் புராஜெக்ட் திட்ட இயக்குனர் டாக்டர் மனோகர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ரோட்டரி ஆரோசிட்டி தலைவர் சிவராமன், பொருளாளர் டாக்டர் பாரத், முன்னாள் முதல்வர் எழில், புராஜெக்ட் திட்ட ஒருங்கிணைப்பாளர் அஷோக், மகாத்மா காந்தி முதியோர் இல்ல நிர்வாக இயக்குனர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவ குழுவினர் முதியோர் இல்லத்தில் உள்ள 16 முதியோர்களுக்கு பல் பரிசோதனை செய்து, பல் எடுத்தல், பல் சுத்தம் செய்தல், பல் அடைத்தல் போன்ற சிகிச்சைகள் அளித்தனர்.

இதில், 12 பேருக்கு செயற்கை பல் இலசமாக பொறுத்தப்பட்டது. மேலும், இம்முகாமில், புற்றுநோய் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பரிசோ தனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News