புதுச்சேரி

கோப்பு படம்.

எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு இலவச போட்டி தேர்வு பயிற்சி

Published On 2023-06-24 06:08 GMT   |   Update On 2023-06-24 06:08 GMT
  • ஓராண்டு கால உதவித் தொகையுடன் கூடிய சிறப்பு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.
  • கல்லூரியில் படிப்பவர்களும் பகுதி நேரமாக இதில் சேர்ந்து பயனடையலாம்.

புதுச்சேரி, ஜூன் 24-

தேசிய வாழ்வாதார மையத்தின் புதுவை துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர் சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எஸ்.சி, எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர்கள் அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராக மையத்தின் சார்பில் ஓராண்டு கால உதவித் தொகையுடன் கூடிய சிறப்பு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.

வருகிற 10-ந் தேதி முதல் தலைசிறந்த தனியார் நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் சேர ஆர்வமுள்ள 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டய படிப்பு படித்தவர்கள், படித்துக் கொண்டிருப்ப வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மையத்தில் வழங்கப்படு கிறது. இதற்கான வயது வரம்பு 18 முதல் 27 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாலைநேரத்தில் பயிற்சி அளிக்கப்படும்.

கல்லூரியில் படிப்பவர்களும் பகுதி நேரமாக இதில் சேர்ந்து பயனடையலாம். மாதந்தோறும் ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு பயிற்சி புத்தகம், எழுது பொருட்கள் வழங்கப்படும். வருகிற 28-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News