தங்க விக்ரமன் பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன் ஆகியோர் வழங்கிய காட்சி.
முன்னாள் எம்.எல்.ஏ. தங்க விக்ரமன் பிறந்த நாள் விழா
- நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
- பா.ஜனதா பொறுப்பாளரும் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்கவிக்ரமன் பிறந்த நாள் கீழ்ப்பரிக்கல்பட்டு டி.வி.ஆர். இல்லத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும் பாகூர் தொகுதி பா.ஜனதா பொறுப்பாளரும் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்கவிக்ரமன் பிறந்த நாள் கீழ்ப்பரிக்கல்பட்டு டி.வி.ஆர். இல்லத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு தொகுதி தலைவர் கோபா லகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சிவராமன், புவனசுந்தரம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அருணாச்சலம், வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா. ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள் வி.பி. ராமலிங்கம், வெங்கடேசன், மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், மாநில துணைத்தலைவர் முருகன், மாநில செயலாளர் நாகராஜ், அகிலன்,கூட்டுறவு பிரிவு தலைவர் வெற்றி செல்வம், பட்டியலணி தலைவர் தமிழ்மாறன், பூண்டி அம்மன் அறங்காவலர் குழு தலைவர் கோவிந்தன்.
தொகுதி துணைத் தலைவர் இளங்கோ, செயலாளர் ராதா கிருஷ்ணன், பாபு, குமரன் பண்ணையார், மகளிர் அணி தவமணி, ஏம்பலம் தொகுதி தலைவர் சக்கரவர்த்தி' அரியாங் குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார்' நெட்டப்பாக்கம் தொகுதி தலைவர் துரைசாமி, மணவெளிதொகுதி லட்சுமிகாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக பாகூர் மூலநாதர் சுவாமி கோவில், மதிகிருஷ்ணபுரம் பட்டாபிராமன் கோவில், கீழ்ப்படிக்கல்பட்டு பூண்டியம்மன் மற்றும் கன்னியகோவில் பச்சை வாழியம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக வழிபாடும், 1500ருக்கும் மேற்பட்டவர்க ளுக்கு நபர்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழா முடிவில் முருகன் நன்றி கூறினார்.