புதுச்சேரி

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்த காட்சி.

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு

Published On 2023-09-19 14:21 IST   |   Update On 2023-09-19 14:21:00 IST
  • கோட்டகுப்பத்தில் உள்ள பிரியாணி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
  • பழைய சிக்கன் 65, 6 கிலோ என மொத்தம் 11 கிலோ பழைய சிக்கனை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி:

நாமக்கல்லில் சவர்மா சிக்கன் சாப்பிட்டு சிறுமி உயிர் இழந்தார், உடல் நலம் பாதிக்கப்பட்டு 43 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் சுகந்தன் உத்தரவின் பேரில், கோட்டகுப்பத்தில் உள்ள பிரியாணி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

வானூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் மோகன் வட்டார உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் ரவி சரவணன் கோட்டகுப்பம் சுகாதார பிரிவு அதிகாரிகள் தின்னாயிரம், பழனி மற்றும் ஊழியர்கள் கோட்டகுப்பம் காந்தி வீதியில் உள்ள ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகள் பிரியாணி கடைகள் ஆகியவற்றில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு கறிக்கடையில் இருந்த 5 கிலோ பழைய கோழிக்கறி, பிரியாணி கடைகளில் விற்பனைக்காக சமைத்து வைக்கப்பட்ட பழைய சிக்கன் 65, 6 கிலோ என மொத்தம் 11 கிலோ பழைய சிக்கனை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News