புதுச்சேரி

 குழந்தைகளுக்கு நவதானிய உணவுப்பொருட்கள் வழங்கிய காட்சி.

அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு உணவுப்பொருட்கள்

Published On 2023-08-08 14:27 IST   |   Update On 2023-08-08 14:27:00 IST
  • கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
  • நவதானிய உணவுப் பொருட்களை அங்கன்வாடி ஊழியர்களிடம் வழங்கினார்.

புதுச்சேரி:-

கோட்டக்குப்பம் நகராட்சி சின்னகோட்டக்குப்பம் 14-வது வார்டு தி.மு.க. சார்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 14 -வது வார்டு செயலாளரும், கவுன்சிலருமான ஸ்டாலின் சுகுமார் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கோட்டக்குப்பம் நகர்மன்ற தலைவர் எஸ்.எஸ். ஜெய மூர்த்தி கலந்து கொண்டு தி.மு.க. கொடி ஏற்றி கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் 14-வது வார்டு தி.மு.க.வை சார்ந்த 3 குடும்பத்திற்கு ஊக்கத்தொகையாக கவுன்சிலர் ஸ்டாலின் சிவக்குமார் தலா 2,500 நிதி உதவியும், தூய்மை பணியாளர்கள் 2 நபர்களுக்கு தலா 500 ரூபாய் மொத்தம் 8,500 ரூபாய் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து 13 மற்றும்14-வது வார்டு சத்யா நகர், சுப்பிரமணியபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் கவுன்சிலர் ஸ்டாலின் சுகுமார் 5 கிலோ நவதானிய உணவுப் பொருட்களை அங்கன்வாடி ஊழியர்களிடம் வழங்கினார்.

Tags:    

Similar News