புதுச்சேரி

தீயனைப்பு வீரர்கள் நடைபயணத்தை அமைச்சர் சாய்.ெஜ.சரவணன்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு நடைபயணம்-அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்

Published On 2023-04-16 12:29 IST   |   Update On 2023-04-16 12:29:00 IST
  • புதுவை அரசின் தீயணைப்புத்துறை சார்பில் தீயணைப்பு சேவை வாரம் கடை பிடிக்கப்படுகிறது.
  • தீயணைப்பு வீரர்களோடு, தன்னார்வலர்களான ஆத்ம மித்ரா, சிவில் டிபன்ஸ் ஆகியோரும் பேரணியில் பங்கேற்றனர்.

புதுச்சேரி:

புதுவை அரசின் தீயணைப்புத்துறை சார்பில் தீயணைப்பு சேவை வாரம் கடை பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி 20-ந் தேதி வரை தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரம், நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தீ விபத்திலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது? என செயல்முறை விளக்கமும் அளித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று கடற்கரை சாலையில் தீ விபத்து விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தீயணைப்பு வீரர்களின் நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ, உதவி கோட்ட தீயணைப்பு அதிகாரி ரித்தோஷ் சந்திரா, நிலைய அதிகாரிகள் முகுந்தன், சுரேஷ், கிருஷ்ணமூர்த்தி, லட்சுமணன், மனோகர்,பக்கிரி, கார்த்திகேயன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், ஓய்வு பெற்ற தீயணைப்பு ஊழியர்கள், அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

தீயணைப்பு வீரர்களோடு, தன்னார்வலர்களான ஆத்ம மித்ரா, சிவில் டிபன்ஸ் ஆகியோரும் பேரணியில் பங்கேற்றனர். துணை தாசில்தார்கள் விபீஷணன், ராஜலட்சுமி ஆகியோர் தீயணைப்பு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பேரணியில் பங்கேற்ற தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.

Tags:    

Similar News