புதுச்சேரி

அரசு பள்ளியில் நிபுண் பாரத் தினம் நடைபெற்ற போது எடுத்த பாடம்.

அரசு பள்ளியில் நிபுண் பாரத் தினம்

Published On 2023-04-10 11:29 IST   |   Update On 2023-04-10 11:29:00 IST
புதுவை அருகே கொம்பாக்கம் வட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2 நிபுண் பாரத்தினம் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி:

கொம்பாக்கம் வட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2 நிபுண் பாரத்தினம் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

பள்ளி துணை ஆய்வாளர் குமார் வழிகாட்டுதலின்படி தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். ஆசிரியர் சத்தியமூர்த்தி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக நிபுண் ஒருங்கிணைபாளர் எலொனா ராணி பங்கேற்று சிறப்புரையாற்றினார் .

ஓவிய ஆசிரியர் முனுசாமி மாணவர் திறன் சார்ந்த ஓவியங்களை பெற்றோரைக் கொண்டு வரையச் செய்தார். மாணவர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர்.

ஆசிரியர் அர்ச்சுணன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியை வனிதா மணி, வெங்கட்பிரியா, சுகந்தா, ருக்மணி செய்திருந்தனர்.

Tags:    

Similar News