புதுச்சேரி
ஒவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.பரிசு வழங்கிய காட்சி.
பள்ளி மாணவர்களுக்கு ஒவிய போட்டி
- கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.பரிசு வழங்கினார்
- ராணிகள் மற்றும் பாதுகாப்பு இயக்க தலைவர் டாக்டர் செல்லமுத்து, தினேஷ்குமார் தலைமை தாங்கினர்.
புதுச்சேரி:
புதுவை பிராணிகள் நலன், பாதுகாப்பு இயக்கம் மற்றும் ரோட்டரி கிளப் பாண்டிச்சேரி காஸ்மஸ் இணைந்து நடத்திய உலக விலங்குகள் தினம் வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
புதுவை பிராணிகள் மற்றும் பாதுகாப்பு இயக்க தலைவர் டாக்டர் செல்லமுத்து, தினேஷ்குமார் தலைமை தாங்கினர். பள்ளி துணை முதல்வர் கவுரி ஓவிய போட்டியை தொடங்கி வைத்தார்.
ஒவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. சான்றிதழ், பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு நிர்வாகிகள் ஆதித்தன், சிரஞ்சீவி ஏற்பாடு செய்தனர். பள்ளி ஆசிரியர் அன்னரத்தினம் நன்றி கூறினார்.