கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் சன். சண்முகம் விளையாட்டு உபகரணங்களை வழங்கிய காட்சி.
விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள்
- கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
- சன்.சண்முகம் தலைமையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வருகிறார்.
புதுச்சேரி:
மணவெளி தொகுதி தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக இளைஞர்கள், மாண வர்களை நல்வழிப்படுத்தும் வகையிலும் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் தி.மு.க. மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் சன்.சண்முகம் தலைமையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வருகிறார்.
இதுபோல் அபிஷேகப்பாக்கம் எங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணி வீரர்களுக்கு சீருடை, கிரிக்கெட் மட்டை, ஹெல்மட் உள்ளிட்ட உபகர ணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் ராஜாராமன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில அமைப்பாளர் ரவி, ஆதிதிராவிடர் மாநில துணை அமைப்பாளர் சக்திவேல், கிளை செயலாளர் ராஜவேல், தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் பலராமன், சாந்தபாலன், செந்தில், தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை ஒருங்கிணை ப்பாளர்கள் செல்வம், விமல்ராஜ், தொகுதி பொருப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் செந்தில், மணி, அருண், லிங்கேஸ்வரன், ராஜா, தனசேகரன், இளவயதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.