புதுச்சேரி

சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நடைபெற்ற போது எடுத்த படம்.

மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரியில் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு

Published On 2023-06-26 12:23 IST   |   Update On 2023-06-26 12:23:00 IST
  • பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீர்வு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
  • பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவம னையின் கீழ் விழுப்புரத்தில் நகர்புற சுகாதார பயிற்சி மையம் இயங்குகிறது.

இங்குள்ள சமுதாய மருத்துவ துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டா டப்படுகிறது.

இந்தாண்டு, சுற்றுச்சூழல் உலக தினத்தை யொட்டி, பூத்தமேடு அரசுஉயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு பிளாஸ்டிக் மாசு பாட்டிற்கான தீர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஓவிய போட்டி நடந்தது. துணை பேராசிரியர் அருள்மொழி, முது நிலை பட்டதாரி சரண்யா, சமூக சேவகி தேவசுந்தரி உட்பட பயிற்சி டாக்டர்கள் பலர் பங்கேற்று மாணவர்களுக்கு பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீர்வு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து, ஓவிய போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News