புதுச்சேரி

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

உருவ பொம்மை எரிப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம்

Published On 2023-03-20 09:13 GMT   |   Update On 2023-03-20 09:13 GMT
  • திருபுவனையில் இயங்கி வருகிற கூட்டுறவு நூற்பாலை கடந்த 10 மாதங்களாக இயங்காமல் மூடி கிடக்கின்றது.
  • தொழிற்சங்கத்தை சேர்ந்த முருகன் வீராசாமி துரை லிங்கம் மஞ்சினி எல்லப்பன் பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுச்சேரி:

திருபுவனை கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள் 3 பேர் மன உளைச்சலில் இறந்து போனவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க கோரியும், திருபுவனையில் இயங்கி வருகிற கூட்டுறவு நூற்பாலை கடந்த 10 மாதங்களாக இயங்காமல் மூடி கிடக்கின்றது.

இந்நிலையில், அதில் பணிபுரியும் ஊழியர்கள் அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலை வாசலில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிற்சங்கத்தை சேர்ந்த முருகன் வீராசாமி துரை லிங்கம் மஞ்சினி எல்லப்பன் பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து அதிகாரியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர் அப்பொழுது போலீஸ்சாருக்கும் தொழிலாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உருவ பொம்மையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

தொழிலாளர்களின் கோரிக்கையை அரசிற்கு தெரியப்படுத்துகிறோம் என்று வாக்குறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

தொழிற்சங்கத்தின் தலைவர் சிவசங்கரன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

Tags:    

Similar News