புதுச்சேரி

கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று அப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

ரூ.2.85 கோடி செலவில் வாய்க்கால் தூர்வாரும் பணி

Published On 2023-05-21 10:39 IST   |   Update On 2023-05-21 10:39:00 IST
  • கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று அப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  • அதிகாரிகளை தொடர்பு கொண்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டு கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட இந்தியன் வங்கி அருகாமையில் தொடங்கும் கடலூர் சாலை முதல் வாணரப்பேட்டை இந்திரா நகர்- நேதாஜி நகர் 1 அசோகன் வீதி சந்திப்பில் இணையும் உப்பனாறு வாய்க்கால் வரை ரூ.2.85 கோடி செலவில் ப-வடிவ வாய்க்கால் தூர்வாரப்படுகிறது.

இப்பணியை தொகுதி எம்.எல்.ஏ. கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கி வைத்தார். இப்பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக அப்பகுதி மக்கள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர். இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று அப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டு கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது தி.மு.க. மாநில பிரதிநிதி கணேசன், கிளை செயலாளர் செல்வம், அசோக், ராகேஷ் மற்றும் சகாயம், செழியன் இளைஞர் அணி பஸ்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News