புதுச்சேரி

வம்பா கீரப்பாளையம் கிழக்கு கடற்கரை சாலையில் புதிய  வாய்க்கால் வசதியை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

ரூ.9 ½ லட்சம் செலவில் வாய்க்கால் வசதி

Published On 2023-10-27 07:20 GMT   |   Update On 2023-10-27 07:20 GMT
  • ரூ.9 1/2 லட்சம் செலவில் யூ வடிவ வாய்க்காலுடன் சிமெண்டு குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது.
  • இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம் கிழக்கு கடற்கரை சாலையில் புதுவை நகராட்சி சார்பில் ரூ.9 1/2 லட்சம் செலவில் யூ வடிவ வாய்க்காலுடன் சிமெண்டு குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது.

இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது நகராட்சி ஆணையர் சிவக்குமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் யுவராஜ், பரமானந்தம், ஒப்பந்ததாரர் அழகேசன், தொகுதி செயலாளர் சக்திவேல், கட்சி நிர்வாகிகள் ராஜி, விநாயகமூர்த்தி, நோயல், முரளி, கோபி, காளப்பன், மோரீஸ், ரகுமான், பாஸ்கல் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News