புதுச்சேரி

வம்பாகீரப்பாளையத்தில் வாய்க்கால் அடைப்புகள் அகற்றம் பணியை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்ட காட்சி.

வாய்க்கால் அடைப்புகள் அகற்றம்-கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை

Published On 2022-08-21 04:51 GMT   |   Update On 2022-08-21 04:51 GMT
  • உப்பளம் தொகுதிக்குட் பட்ட வம்பாகீரபாளையம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ப வடிவ வாய்க்காலில் அடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் செல்லாமல் இருந்தது.
  • சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வழக்கம்போல் அங்கு ப-வடிவ வாய்க்காலில் கழிவு நீர் நிரம்பி வீட்டு வாசல்களில் தேங்கி நிற்க தொடங்கியது.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதிக்குட் பட்ட வம்பாகீரபாளையம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ப வடிவ வாய்க்காலில் அடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் செல்லாமல் இருந்தது.

சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வழக்கம்போல் அங்கு ப-வடிவ வாய்க்காலில் கழிவு நீர் நிரம்பி வீட்டு வாசல்களில் தேங்கி நிற்க தொடங்கியது.

இது குறித்து உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு துப்புரவு பணியாளர்ளுடன் வந்த நகராட்சி அதிகாரிகள் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்புகளை கழிவு நீரை உறிந்து எடுக்கும் நவீன எந்திரம் கொண்ட வாகனத்தின் உதவியுடன் சரிசெய்தனர். இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. உடன் இருந்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியின் போது தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி மற்றும் தி.மு.க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News