புதுச்சேரி
மோடி அரசின் சாதனைகளை விளக்கி வீடுகளில் பா.ஜனதாவினர் ஸ்டிக்கர் ஒட்டிய காட்சி.
வீடு வீடாக சென்று மோடி அரசின் சாதனை விளக்கம்
- பா.ஜனதா தொகுதி தலைவர் இன்பசேகர் தலைமை தாங்கினார்.
- கிளை தலைவர் பிேராம்குமார், கேந்திர பொறுப்பாளர் கமல கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை தொகுதி பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டுகளின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் வீடு வீடாக சென்று சாதனைகளை விளக்கி மீண்டும் மோடி பிரதமராக வேண்டி சாதனை குறிப்பேடுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு பா.ஜனதா தொகுதி தலைவர் இன்பசேகர் தலைமை தாங்கினார்.
மூத்த நிர்வாகி பழனிவேல் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம் கலந்து கொண்டு மோடியின் அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். கிளை தலைவர் பிேராம்குமார், கேந்திர பொறுப்பாளர் கமல கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.