புதுச்சேரி

மாணவர்களின் கல்வி கட்டணம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்த  போது எடுத்த படம்.

null

கல்வி கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது

Published On 2023-08-01 14:37 IST   |   Update On 2023-08-01 15:20:00 IST
  • கல்வி கட்டணம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.
  • அதிகாரிகள் மற்றும் ஆதி திராவிட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி: 

புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் துறை மற்றும் பழங்குடி மாணவர்களின் கல்வி கட்டணம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை இயக்குனர் சாய். இளங்கோவன் தலைமை தாங்கினார்.

அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர்.ராமச்சந்திரா, தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் ஆதி திராவிட அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.

கூட்டத்தில் பேசிய இயக்குனர் சாய். இளங்கோவன், புதுச்சேரியில் ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வியை மேம்படுத்தும் வகையில் அவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்று செலுத்தி வருகிறது.

அதன்படி மாணவர்க ளின் விண்ணப்பங்களை உரிய காலத்திற்குள் ஆதிதிராவிடர் நலத்துறை யில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்களில் தனியாக நோடல் அதிகா ரியை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

விண்ணப்பித்த அனைத்து மாணவ ர்களுக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை கட்டணத்தை வழங்கும் என்றும், அதுவரை மாணவர்களை கட்டணம் கேட்டு வற்புறுத்துவதோ தொந்தரவு செய்வதோ கூடாது.

அப்படி கல்வி கட்டணம் செலுத்துவது குறித்து பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என எச்சரிக்கை விடுத்தார்.

ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஸ்காலர்ஷிப் பெறுவதில் ஒரு சில குறைபாடுகள் உள்ளது குறித்து பள்ளி கல்லூரி சார்பில் எடுத்து ரைக்கப்பட்டது.

அதற்கும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என இயக்குனர் சாய்.இளங்கோவன் தெரி வித்தார்.

Similar News