புதுச்சேரி
தனியார் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடையை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தய்யா வழங்கிய காட்சி.
தனியார் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் நன்கொடை
- பொதுப்பணித்துறை ஊழியர் கூட்டுறவு சங்கம் சார்பில் நடைபெற்றது.
- கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தய்யா வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித்துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் பொதுநல நிதியில் இருந்து பெண் குழந்தைகள் மற்றும் ஏழை பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் தனியார் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.
இதனை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தய்யா வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் இளங்கோ துணைத்தலைவர் அண்ணாமலை, பொருளாளர் முருகன், இயக்குனர்கள் சரவணன், சேகர், வெங்கடேஸ்வரன், குணசேகர பாண்டியன், வீரபுத்திரன் மற்றும் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.