புதுச்சேரி

பா.ஜனதா நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் சாமிநாதன், வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தேசிய கொடி வழங்கிய காட்சி. 

பா.ஜனதா நிர்வாகிகளுக்கு தேசிய கொடி விநியோகம்

Published On 2023-08-13 06:48 GMT   |   Update On 2023-08-13 06:48 GMT
  • மாநில தலைவர் சாமிநாதன் வழங்கினார்
  • அனைத்து மாநிலங்களிலும் தேசியக்கொடிகளை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுச்சேரி:

76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள் தோறும் அனைத்து மாநிலங்களிலும் தேசியக்கொடிகளை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநில மாவட்ட தொகுதி நிர்வாகிகளுக்கு தேசியக் கொடிகள் வழங்கும் நிகழ்ச்சி பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

பா.ஜனதா மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன், எம்.எல்.ஏ. வி.பி. ராமலிங்கம் பொதுச் செயலாளர் மோகன் குமார் துணைத்தலைவர் தங்க விக்ரமன் மாநில செயலாளர் நாகராஜ் முன்னாள் தலைவர் இளங்கோவன் அலுவலக பொறுப்பாளர் மகேஷ் அலுவலக செயலாளர் கவுரிசங்கர் உள்ளிட்டோர் நிர்வாகிகளுக்கு தேசிய கொடிகளை வழங்கினர்.

தேசிய கொடிகளை உழவர் கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், பட்டியல் அணி மாநில தலைவர் தமிழ்மாறன், சமூக ஊடகப்பிரிவு அமைப்பாளர்கள் கார்த்தி கேயன், குருசங்கரன் மற்றும் மாநிலத்தின் பல்வேறு நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.

Tags:    

Similar News