புதுச்சேரி

உருளையன்பேட்டை தொகுதியில் மோடி அரசின் சாதனைகள் குறித்து பா.ஜனதாவினர் பிரபுதாஸ் தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கிய காட்சி.

மோடி ஆட்சியின் 9 ஆண்டு சாதனை பிரசுரம் விநியோகம்

Published On 2023-07-04 14:19 IST   |   Update On 2023-07-04 14:19:00 IST
  • 2 ஆண்டு கால சாதனைகள் குறித்த துண்டறிக்கை உருளையன்பேட்டை தொகுதியில் வீடு வீடாக வழங்கப்பட்டது.
  • புதுவையில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 969 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை உருளையன்பேட்டை தொகுதி பா.ஜனதா நிர்வாகி பிரபுதாஸ் தலைமையில் மத்திய மோடி ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனை மற்றும் புதுவை தேசிய ஜனநாயக கூட்டணியின் 2 ஆண்டு கால சாதனைகள் குறித்த துண்டறிக்கை உருளையன்பேட்டை தொகுதியில் வீடு வீடாக வழங்கப்பட்டது.

இந்த துண்டறிக்கையில் மத்திய மோடி அரசின் மூலம் புதுவை மக்களுக்கு வழங்கப்பட்ட திட்டங்கள் குறித்தும், குறிப்பாக புதுவையில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 969 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி மதிப்பில் 16,368 வீடுகள் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கட்டப்பட்டுள்ளது குறித்தும் மற்றும் புதுவைக்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்தும் அதேபோல் புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் 2 ஆண்டுகளில் புதுவைக்கு செய்த நலத்திட்டங்கள் குறித்தும் இந்த துண்ட றிக்கையில் அச்சிடப்பட்டு வீடு வீடாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உருளையன்பேட்டை தொகுதி பா.ஜனதா தலைவி நாகம்மாள், மாவட்ட துணை தலைவர் பிரபு, ஓ.பி.சி. அணிமாவட்ட தலைவி கீதாலட்சுமி, எஸ்.சி. மோட்சா மாவட்ட தலைவர் வெற்றி, தொகுதி துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னாள் தலைவர் சக்திவேல் பொதுச் செயலாளர் மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News