புதுச்சேரி

கோப்பு படம்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஜி.பி. ஆலோசனை

Published On 2023-07-27 07:01 GMT   |   Update On 2023-07-27 07:01 GMT
  • மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், திருக்காஞ்சி கோவில்களுக்கும் ஜனாதிபதி செல்கிறார்.
  • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரி வாக ஆலோசிக்கப்பட்டது.

புதுச்சேரி:

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 6,7-ந் தேதிகளில் புதுவைக்கு வருவதாக கூறப்பட்டது.

6-ந் தேதி சென்னையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்கிறார். இதனால் 7, 8-ந் தேதிகளில் புதுவைக்கு ஜனாதிபதி வருகிறார். புதுவை கடற்கரை சாலை நீதித்துறை விருந்தினர் மாளிகையில் தங்கும் ஜனாதிபதி, ஜிப்மர் கலையரங்கில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.

8-ந் தேதி ஆரோவில் செல்கிறார். இடையே மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், திருக்காஞ்சி கோவில்களுக்கும் ஜனாதிபதி செல்கிறார்.

ஜனாதிபதி வருகையையொட்டி அவர் தங்குமிடம், செல்லும் பாதைகள், விழா இடங்களில் பாதுகாப்பு குறித்து டி.ஜி.பி. சீனிவாஸ் தலைமையில் ஆலோ சனைக்கூட்டம் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு பிரஜேந்தி ரகுமார் யாதவ், அனிதாராய், நாராசை தன்யா, சூப்பிரண்டுகள் செல்வம், மாறன், மோகன்குமார், ரவிக்குமார், சுவாதிசிங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரி வாக ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

Similar News