புதுச்சேரி

மருத்துவ நிபுணர் அலெக்ஸ் சக்காரியா.

பிம்ஸ் மருத்துவமனையில் மன அழுத்தம் கருத்தரங்கு

Published On 2023-09-21 13:56 IST   |   Update On 2023-09-21 13:56:00 IST
  • மருத்துவ நிபுணர் அலெக்ஸ் சக்காரியா பங்கேற்பு
  • ஒரு மூச்சு எண்ணிக்கை கணக் கீடு மூலம் மன இறுக்கம் குறைக்கலாம் இவ்வாறு அவர் பேசினார்.

புதுச்சேரி:

பிம்ஸ் மருத்துவ மனையில், மன அழுத்தத்தை குறைப்பது தொடர் பான தொடர் மருத்துவ கருத்தரங்கு நடந்தது. சமுதாய மருத்துவ துறை மற்றும் மருத்துவ கல்வி பிரிவு இணைந்து நடத்திய இக்கருத்தரங் கிற்கு சமுதாய மருத்துவ துறை தலைவர் ராஜேஷ் வரவேற்றார்.

பிரபல பொது மருத் துவ நிபுணரான அலெக்ஸ் சக்காரியா, மன அழுத் தம் தொடர்பான செயலியை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

மன அழுத்தத்தை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் 'ரெமர்சய்ஸ்' செயலியில் குறிப்பிட்ட பயிற்சிகள் மூலம் நம்மால் குறைக்க முடியும்.

கனி வான பேச்சு, சீரான உடற் பயிற்சி, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சின்ன சின்ன பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.

மேலும் அதற்குரிய செயலி நமக்கு நினைவூட்டும். மருத்துவ மற்றும் செவிலிய மாணவ-மாணவிகள் பல குழுக்களாக இணைந்து ஒரு மூச்சு எண்ணிக்கை கணக் கீடு மூலம் மன இறுக்கம் குறைக்கலாம் இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், மருத்துவ மாணவர்களுடன் கலந்து ரையாடினார். அவருக்கு, பொது மருத்துவ நிபுணர் சுவாமிநாதன், மகப்பேறு மருத்துவர் பத்மா ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்.

நிகழ்ச்சியை பேராசிரியர் ஜாய் தொகுத்து வழங்கினார்.

Tags:    

Similar News