புதுச்சேரி
பேரணியை முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகா தொடங்கி வைத்த காட்சி.
- முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகா தொடங்கி வைத்தார்
- சிக்கன்குனியா தொற்று நோய்களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை ரெட்டி யார்பாளையம் பிரசிடென்சி பள்ளி மாணவர்கள் டெங்கு, சிக்கன்குனியா தொற்று நோய்களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர். திருவண்டார் கோவில் கிராமத்தில் சிவன் கோவில் அருகே தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை என்.ஆர்.காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சிவன் கோயில் அறங்காவல் துறை தலைவர் சரவணன், ராஜா, கிராம பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ண, என்ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் சக்திவேல், ராஜேந்திரன், ராஜசேகர், பெருமாள், செல்வம், பன்னீர்செல்வம், ராஜேஷ், சிவா, விக்னேஷ், வீரப்பன், இளையராஜா, பாரதிராஜா, வேலாயுதம், அன்புதாசன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.