புதுச்சேரி

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த காட்சி.

தார்சாலை, மின் விளக்கு வசதி-சபாநாயகர் நடவடிக்கை

Published On 2022-12-02 09:36 GMT   |   Update On 2022-12-02 09:36 GMT
  • மணவெளி தொகுதி சுடலை வீதி பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
  • மேலும் மின்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு அப்பகுதியில் புதிய மின்கம்பங்கள் நட்டு தெரு மின்விளக்குகள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

புதுச்சேரி:

மணவெளி தொகுதி சுடலை வீதி பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

குறிப்பாக அப்பகுதிக்கு புதிய தார் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் புதிய மின் கம்பங்கள் அமைத்து தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும் என்றும் கழிவு நீர் வாய்க்கால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதற்க்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பதில் அளிக்கும் போது அப்பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் வசதியுடன் கூடிய புதிய தார் சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் விரைவில் சாலை அமைக்கும் பணி தொடங்கும் எனவும் தெரிவித்தார். மேலும் மின்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு அப்பகுதியில் புதிய மின்கம்பங்கள் நட்டு தெரு மின்விளக்குகள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தின் துரித நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News