புதுச்சேரி

கோப்பு படம்.

அனுமதியின்றி இயங்கிய நடன மது பாருக்கு 'சீல்'

Published On 2023-04-21 14:23 IST   |   Update On 2023-04-21 14:23:00 IST
  • நடன மது பார்களை கண்காணிக்க முதல்- அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
  • புதுவை நகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவித்தார்.

புதுச்சேரி:

புதுவை அரசு சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கவும், வருவாயை பெருக்கும் நோக்கில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது.

இந்த ரெஸ்டோ பார்கள் அனுமதி நேரத்தை தாண்டி நள்ளிரவிலும் செயல்படுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து நடன மது பார்களை கண்காணிக்க முதல்- அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

அதன்பேரில் கலால் மற்றும் போலீசார் மது பார்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெருமாள் கோவில் வீதியில் உள்ள ஒரு ரெஸ்டோ பாரில்  பெரியக்கடை போலீசார் சோதனை செய்தனர். அந்த பார் அனுமதியின்றி செயல்படுவது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நாகராஜ், புதுவை நகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, ஆணையர் உத்தரவின் பேரில், வருவாய் அதிகாரி சாம்பசிவம் தலை மையில் நகராட்சி ஊழியர்கள் பெருமாள் கோவில் வீதியில் இயங்கி வந்த ரெஸ்டோ பாரை பூட்டி 'சீல்' வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.

Tags:    

Similar News