புதுச்சேரி

புயல் சின்னம்: மீனவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்த போலீசார்

Published On 2022-12-07 20:23 IST   |   Update On 2022-12-07 20:23:00 IST
  • மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது

காரைக்கால்:

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது புயலாக வலுவடைந்து வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் சின்னம் காரணமாக 8ம் தேதி, 9ம் தேதி மற்றும் 10ம் தேதி தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புயல் சின்னம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் காரைக்கால் மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று போலீசார் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்புமாறும் மீனவ கிராமங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவ கிராமங்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் இருந்து ஆந்திர பிரதேச கடற்பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் சென்ற 43 படகுகளில் உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டு இதுவரை 31 படகுகள் வந்து சேர்ந்துள்ளதாகவும், 10 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News