புதுச்சேரி

கோப்பு படம்.

null

அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் பிரச்சினைக்கு ஆக்கப்பூர்வமான தீர்வு

Published On 2023-07-19 10:28 IST   |   Update On 2023-07-19 10:29:00 IST
  • அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம்
  • 100 அடி ரோடு இந்திராகாந்தி சிக்னல் அருகில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம் முன்பு பெருந்திரள் போராட்டம்

புதுச்சேரி:

புதுவை மாநில அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் முதலியார் பேட்டையில் உள்ள சி.ஐ.டி.யூ. புதுவை மாநில குழு அலுவலகத்தில் நடந்தது.

மாநில பொதுச் செயலாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தலைவர் பிரபுராஜ், துணைத்தலைவர் கொளஞ்சியப்பன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா. பொருளாளர் அந்தோணி. ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர் ஞானசேகரன், துணை தலைவர் சொக்கலிங்கம் ஏ.ஐ.சி.சி.டி.யு. மாநில தலைவர் மோதிலால். பொதுச் செயலாளர் புருஷோத்தமன் எல்.எல்.எப். தொழிற்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் செந்தில, எம்எல்எப் துணைத் தலைவர் மாசிலாமணி. என்டிஎல்எப் மாநில தலைவர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மத்திய அரசை கண்டித்து ஆகஸ்ட் மாதம் 9-ந் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்க நாளில் 100 அடி ரோடு இந்திராகாந்தி சிக்னல் அருகில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம் முன்பு பெருந்திரள் போராட்டம் நடத்துவது என்றும் புதுவை மின்சார துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவினை முழுக்க கைவிடும் படியும், அரசின் மின்துறை சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தியும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆக்கப்பூர்வமான தீர்வு கண்டிட கோரியும் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News