புதுச்சேரி

கோப்பு படம்.

புதுவையில் 11 பேருக்கு கொரோனா

Published On 2023-04-08 14:22 IST   |   Update On 2023-04-08 14:22:00 IST
  • புதுவையில் 227 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.
  • புதுவையில் 12, காரைக்காலில் ஒருவர் என 13 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.

புதுச்சேரி:

புதுவையில் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

புதுவையில் 227 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 7, காரைக்காலில் 4 பேர் என மொத்தம் 11 பேருக்கு புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் புதுவையில் 4, காரைக்காலில் 2, ஏனாமில் ஒருவர் என 7 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுவையில் 87, காரைக்காலில் 95, ஏனாமில் 13, மாகிவில் 2 பேர் என மொத்தம் 197 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 12, காரைக்காலில் ஒருவர் என 13 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். புதுவையில் இதுவரை ஆயிரத்து 977 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

புதுவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உட்பட கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News