புதுச்சேரி

புதுவையில் மழைக்கு குடை பிடித்தபடி கடற்கரை அழகை ரசித்த சுற்றுலா பயணிகள்.

புதுவையில் தொடர்மழை

Published On 2022-09-01 14:09 IST   |   Update On 2022-09-01 14:09:00 IST
  • புதுவையில் கடந்த சில நாட்களாக இரவில் லேசான மழை பெய்து வந்தது.
  • குளிர்ந்த காற்று வீசியது. 9 மணிக்கு மேல் மழையின் தாக்கம் அதிகரித்தது.

புதுச்சேரி:

புதுவையில் கடந்த சில நாட்களாக இரவில் லேசான மழை பெய்து வந்தது.

அதிகாலையில் கனமழை பெய்தது. தொடர்ந்து பகலிலும் லேசான மழை பெய்தது. இரவிலும் லேசான தூறல் இருந்தது.

வானம் மப்பும், மந்தராமுமாக இருந்தது. குளிர்ந்த காற்று வீசியது. 9 மணிக்கு மேல் மழையின் தாக்கம் அதிகரித்தது. நேரம் செல்ல செல்ல மழை கொட்டியது. சுமார் 11.30 மணியளவில் கனமழை பெய்தது. நகர சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

மேலும் பெய்து வரும் தொடர் மழையால் கட்டிட தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

அதோடு பெய்து வரும் மழையால் வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கி போனார்கள்.

வருகிற 4-ந் தேதி வரை தமிழகம், புதுவையில் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News