புதுச்சேரி

கோப்பு படம்.

கடல்நீரை குடிநீராக்க குஜராத் நிறுவனத்துடன் ஆலோசனை

Published On 2023-07-15 13:05 IST   |   Update On 2023-07-15 13:05:00 IST
  • நிதி நெருக்கடியால் பெரியளவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
  • கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். மாநிலத்தில் 68 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.

புதுச்சேரி:

புதுவை மாநிலத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

நிதி நெருக்கடியால் பெரியளவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

இதனால் சிறியளவில் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. குஜராத் மாநிலம் பாவ் நகரில் உள்ள மத்திய உப்பு மற்றும் கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனத்துடன் புதுவை அரசு இணைந்து செயல்பட உள்ளது.

இந்த நிறுவனக் குழுவினர் விரைவில் புதுவைக்கு வந்து தொழில்நுட்ப சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் ஒரு எம்.எல்.டி. குடிநீர் கிடைக்கும். இந்த திட்டத்துக்கு ரூ.25 கோடி செலவாகும். புதுவை கடற்கரையோரம் 2 ½ ஏக்கர் பரப்பில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். மாநிலத்தில் 68 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் கிடைக்கும் நீர் முதல்கட்டமாக 24 சுத்திகரிப்பு நிலையம் மூலம் வழ ங்கப்படும். இதன்மூலம் ஒரு லட்சத்து 78 ஆயிரம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

Tags:    

Similar News