புதுச்சேரி

உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி பேசிய காட்சி. 

காங்கிரசார் உண்ணாவிரதம்-கண்டன போராட்டம்

Published On 2023-03-30 09:08 GMT   |   Update On 2023-03-30 09:08 GMT
  • புதுவை மெயின் ரோட்டில் உண்ணாவிரதம் மற்றும் கண்டன போராட்டம் நடைபெற்றது.
  • தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பாபையா, மண்ணாங்கட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுச்சேரி:

அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு கண்டித்து ஏம்பலம் தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் கிருமாம்பாக்கம் கடலூர்-புதுவை மெயின் ரோட்டில் உண்ணாவிரதம் மற்றும் கண்டன போராட்டம் இன்று நடைபெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பாபையா, மண்ணாங்கட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எம்.பி. வைத்திலிங்கம், மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்தியநாதன் எம்,எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் எம்,எல்.ஏ.க்கள் நீலகங்காதரன், அனந்தராமன், கார்த்திகேயன், விஜயவேணி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்வாணன் ஆகியோர் மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினர்.

திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கூட்டணி கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர்கள், மகளிர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், பொறுப்பாளர்கள், கிருமாம்பாக்கம் சக்கரவர்த்தி, சூசைராஜ், வட்டார தலைவர் சிவராமகிருஷ்ணன், திருநாவுக்கரசு, கருணாநிதி பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News