புதுச்சேரி

மகாபலிபுரத்தில் நடந்த கோடை சந்திப்பு கூட்டத்தில் அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்ற காட்சி.

நல திட்டங்களை பெற மீனவர்களுக்கு நிபந்தனைகளை நீக்க வேண்டும்

Published On 2023-07-11 05:44 GMT   |   Update On 2023-07-11 05:44 GMT
  • மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் மீன்பிடி கோடை சந்திப்பு மகாபலிபுரத்தில் நடந்தது.
  • மீனவ பயனாளிகள் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது.

புதுச்சேரி:

தேசிய மீன் விவசாயிகள் தினத்தையொட்டி மத்திய அரசின் மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் மீன்பிடி கோடை சந்திப்பு மகாபலிபுரத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் புதுவை அரசின் பிரதிநிதியாக அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்று பேசியதாவது:-

புதுவையில் அரசு நல திட்டங்களுக்கு மீனவ பயனாளிகள் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது. இதனை நீக்க வேண்டும்.

டி.ஆர்.பட்டினத்தில் மீன் இறங்கு மையம், ஆற்று முகத்துவாரம் சுகாதாரமாக இருக்க ஆய்வு மேற்கொள்ள வேண்டும். காரைக்காலில் தற்போதுள்ள மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும். காரைக்கால் மேடு, பட்டினச்சேரியில் மீன் இறங்கு துறையை கையாளவும், மீன்பிடி கைவினை பொருட்கள் பாதுகாப்பாக நங்கூர மிடவும் கட்டுமானம் மேற்கொள்ள வேண்டும்.

புதுவை, காரைக்கால் சுனாமி குடியிருப்புகளில் சாலை, வடிகால், குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். காரைக்கால் வடக்கு கடற்கரை, மாகி கட ற்கரையில் உள்ள பாதுகாப்பு சுவர்களை பலப்படுத்த வேண்டும். மாகி துறைமுகத்தில் விடு பட்ட பணிகளை நிறைவு செய்ய 100 சதவீத நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் காரைக்கால் மீனவர்களின் படகுகள், வலைகளை இலங்கை அரசு நாட்டுடமை ஆக்குகிறது. மத்திய அரசு இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி படகுகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களுக்கு கடன் அட்டை மூலம் வட்டியின்றி கடன் வழங்க வேண்டும். புதுவை யூனியன் பிரதேசம் முழுவதும் கடல் அரிப்பை தடுக்க உடனடியாக வடக்கு தெற்காக பாதுகாப்பு சுவர் கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News