புதுச்சேரி

ஊசுடு தொகுதியைச் சேர்ந்த அரசு பள்ளிகளுக்கு அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கணினி வழங்கிய காட்சி.

ஊசுடு தொகுதியைச் சேர்ந்த அரசு பள்ளிகளுக்கு கணினி

Published On 2023-06-12 08:20 GMT   |   Update On 2023-06-12 08:20 GMT
  • குரும்பாபட்டு தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது.
  • அமைச்சர் சாய்.ஜெ சரவணன்குமார், சிவசங்கரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு அதிநவீன கண்காணிப்பு கேமராவை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி குரும்பபட்டு தொழில் முனைவோர் கூட்டமைப்பு மற்றும் ஸ்ட்ரைவ் நிறுவனம் சார்பில், ஊசுடு தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கு இலவச கணினி வழங்கும் விழா மற்றும் குருமாம்பேட் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், மக்கள் பயன்பாட்டிற்காக அதிநவீன கண்காணிப்பு கேமரா அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி குருமாம்பேட் சமுதாய நலக்கூடத்தில் இன்று நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தலைவர் குணசேகரன், செயலாளர் மோகன், புரவலர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ சரவணன்குமார், சிவசங்கரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு அதிநவீன கண்காணிப்பு கேமராவை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

மேலும் ஊசுடு தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கு இலவச கணினிகளை வழங்கி சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ட்ரைவ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராமச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் , புதுவை வணிகர் கூட்டமைப்பு தலைவர் பாபு, பொதுச்செயலாளர் முருக பாண்டியன், கூட்டமைப்பின் துணைத் தலைவர் பிரபாகர், பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News