புதுச்சேரி

வருவாய் பிரிவு அதிகாரிகளுக்கு ஆணையர் கார்த்திகேயன் பாராட்டிய காட்சி.

கோடையில் தடையின்றி குடிநீர்-கொம்யூன் ஊழியர்களுக்கு ஆணையர் உத்தரவு

Published On 2023-04-13 11:36 IST   |   Update On 2023-04-13 11:36:00 IST
  • புதுவை அருகே பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
  • கோடைகாலங்களில் கிராமங்களுக்கு குடிநீர் தடையின்றி விநியோகிக்கப்படுவது போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை கலெக்டர் தலைமையில் நடைபெற்ற கோடைகால வெயிலின் தாக்கம் தொடர்பான ஆலோசனை கூட்ட அறிவுறுத்தலின் படி சித்திரையை வரவேற்போம் என்ற தலைப்பில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அனைத்து நிலை ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் பொதுமக்களுக்கு தாகத்தை தீர்க்கும் வகையில் முக்கிய இடங்களில் நீர்மோர் பந்தல் அமைப்பது, கோடைகாலங்களில் கிராமங்களுக்கு குடிநீர் தடையின்றி விநியோகிக்கப்படுவது போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 1.4.2022 முதல் 31.3.2023 வரை வருவாய் பிரிவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டி சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் அலுவலக மேலாளர் ரவி, உதவி பொறியாளர் முத்துசிவம், இளநிலைப் பொறியாளர் , வருவாய் ஆய்வாளர் மற்றும் இதர ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News