புதுச்சேரி

தேங்காய்திட்டு துறைமுகம் தூர்வாரும் பணி அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார். அருகில் எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, பாஸ்கர் உள்ளனர்.

தேங்காய்திட்டு துறைமுகம் தூர்ர்வாரும் பணி

Published On 2023-06-08 08:16 GMT   |   Update On 2023-06-08 08:16 GMT
  • புதுவை தேங்காய்த்திட்டில் உள்ள மீன்பிடி துறைமுகம் 2003-ல் திறக்கப்பட்டது.
  • 18 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு படகுகளை நிறுத்தி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை தேங்காய்த்திட்டில் உள்ள மீன்பிடி துறைமுகம் 2003-ல் திறக்கப்பட்டது. 18 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு படகுகளை நிறுத்தி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

2015 முதல் துறைமுகம் தூர்வாரப்படாததால் படகுகள் அடிக்கடி சேதமாகி வருகிறது. இதையடுத்து துறைமுகத்தில் படகுகள் கட்டும் இடத்தில் குவிந்துள்ள 35 ஆயிரம் கியூபிக் மீட்டர் மணலை ரூ.1.40 கோடியில் அகற்றி ஆழப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை அமைச்சர் லட்சுமிநாராயணன் இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் அனிபால்கென்னடி, பாஸ்கர், மீனவ கிராம பஞ்சாயத்தார் உட்பட பலர் கலந்துகொண்டனர். படகுகள் கட்டும் இடத்தில் தற்போதுள்ள 2 மீட்டர் 4 மீட்டராக ஆழப்படுத்தப்பட உள்ளது. இதனால் விசைப்படகுகள் தரை தட்டாமல் எளிதாக கடலுக்குள் சென்றுவர வாய்ப்பு ஏற்படும். வரும் 15-ந் தேதி மீன்பிடி தடைக்காலம் முடிவடைய உள்ளது. இந்நிலையில் துறைமுகம் தூர்வாரப்படுவது மீனவர்க ளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News