புதுச்சேரி

கோப்பு படம்.

கூட்டுறவு கல்வியியல் கல்லூரியில் பி.எட். படிக்க விண்ணப்பம்

Published On 2023-08-19 13:51 IST   |   Update On 2023-08-19 13:51:00 IST
  • பி.எட். 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு சென்டாக் மூலம் சேர்க்கை நடக்கிறது.
  • புதுவை மாணவர்கள் சேர்க்கைக்கு பிறகு காலி யிடம் பிற மாநில விண்ண ப்பங்களுக்கு பரிசீலிக்கப்படும்.

புதுச்சேரி:

புதுவை கூட்டுறவு கல்வியியல் கல்லூரி முதல்வர் செந்தில்வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை கூட்டுறவ கல்வியியல் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த வர்களுக்கான பி.எட். 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு சென்டாக் மூலம் சேர்க்கை நடக்கிறது. புதுவை மாநிலத்தை சேர்ந்த தகுதியான மாணவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்த விண்ணப்பம் கல்லூரி இணையளத்தில் பதவியேற்றம் செய்யப்பட்டு ள்ளது. அடுத்தமாதம் 4-ந் தேதி வரை விண்ண ப்பிக்கலாம். பி.எட். படிப்பு சேர்க்கை கல்வி தகுதி, கட்டண விபரம் கல்லூரி இணையதள முகவரியிலோ, நேரிலோ பெறலாம். புதுவை மாணவர்கள் சேர்க்கைக்கு பிறகு காலி யிடம் பிற மாநில விண்ண ப்பங்களுக்கு பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News