புதுச்சேரி

கோப்பு படம்.

மூடப்பட்டுள்ள பூங்காக்களை புனரமைத்து திறக்க வேண்டும்-சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை

Published On 2023-03-29 10:04 IST   |   Update On 2023-03-29 10:04:00 IST
  • 2030-க்கு பிறகு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என எச்சரிச்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • சாலை விரிவாக்க பணியின் போது மின் கம்பங்களை நகர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி:

மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் பேசியதாவது:-

2030-க்கு பிறகு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என எச்சரிச்கை விடுக்கப் பட்டுள்ளது. எனவே குடிநீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அனுமதி தரும்போது நிலத்தடி நீரை சேகரிக்க அறிவுறுத்த வேண்டும்.

தியாகுமுதலியார் நகர், பாரதிதாசன் நகர் குடியிருப்பில் மூடப்பட்ட பூங்காக்ககளை புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சாலை விரிவாக்க பணியின் போது மின் கம்பங்களை நகர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுபட்டுள்ள பகுதிகளில் பாதாள சாக்காடை அமைத்து தர வேண்டும்.

வேல்ராம்பட்டு ஏரியை படகு குழாமாக மாற்ற வேண்டும். ஒரே செயலியல் புதுவையின் அனைத்து சுற்றுலா தலங்களும் அமையு மாறு வடிவமைக்க வேண்டும். இதனால் சுற்றுலா பயணிகள் அனைத்து இடங்களையும் எளிதில் சென்று பார்வையிடுவர்.

சேமநல நிதியை உயர்த்தி வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். நீதிமன்றத்தில் உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு சம்பத் பேசினார்.

Tags:    

Similar News