புதுச்சேரி

கோப்பு படம்.

தெருக்கூத்து நிகழ்ச்சியில் மோதல்

Published On 2023-07-21 09:09 GMT   |   Update On 2023-07-21 09:09 GMT
  • வாலிபர் மீது தாக்குதல்-வீடு சூறை
  • காயமடைந்த விஜயை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்தி ரியில் அனுமதித்தனர்.

புதுச்சேரி:

திருபுவனை அருகே நல்லூர் பகுதியில் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடந்தது. இந்நிகழ்ச்சியை யொட்டி இரவு தெருக்கூத்து நடைபெற்றது.

இதனை அதே பகுதியை சேர்ந்த ஏழையப்பன் என்பவரின் மகன் விஜய் பார்க்க சென்றார்.

அப்போது அங்கு குடிபோதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் பிரதாப் ஆகியோர் விஜயை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த விஜயை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்தி ரியில் அனுமதித்தனர்.

இது குறித்து ஏழையப்பன் திருபுவனை போலிசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே விஜயை தாக்கியதை பற்றி அறிந்த அவரது உறவினர்கள் ஆத்திரமடைந்து சுரேஷின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அங்கு சுரேஷ் இல்லாததால் ஆவேசமடைந்த அவர்கள் சுரேஷ் வீட்டின் கதவு, ஜன்னல் களை உடைத்து விட்டு சென்று விட்டனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News