புதுச்சேரி

கோப்பு படம்.

புதுவை அரசு நிர்வாகத்தில் தலைமை செயலர் தலையீடு-அ.தி.மு.க. புகார்

Published On 2023-08-25 13:26 IST   |   Update On 2023-08-25 13:26:00 IST
  • அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவிப்பதற்கு முன்பு கவர்னர் மாளிகையில் இருந்து ஒப்புதல் வழங்கப்பட்டதாக அறிக்கை வெளி வருகிறது.
  • இந்த கல்வி ஆண்டே மருத்துவ கல்வியில் 10 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி பெற்று அரசாணையை வெளியிட வேண்டும்

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருப ர்களிடம் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் அரசு நிர்வாகத்தில் அதிகார வர்க்கம் என்பது 2, 3 பிரிவு களாக பிரிந்து கிடக்கிறது. தேர்ந்தெடு க்கப்பட்ட அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவிப்பதற்கு முன்பு கவர்னர் மாளிகையில் இருந்து ஒப்புதல் வழங்கப்பட்டதாக அறிக்கை வெளி வருகிறது. இது மக்களால் தேர்ந்தெடுத்த அரசை பின்னுக்கு தள்ளுவதாகும். புதுவை தலைமை செயலாளர் நிர்வாக விவகாரத்தில் தலையிடுகிறார். குறிப்பாக அரசு ஊழியர்கள் பணி நிரந்தரம், பணியிட மாற்றம் போன்ற பல்வேறு விஷயங்களை முதல்-அமைச்சருக்கு தெரியப்படுத்தா மல் அரசு நிர்வாகம் செயல்படுகிறது.

இது தேவை யற்ற குழப்ப ங்களை உருவாக்கி வருகிறது. மாநில தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தலைமை செயலாளர் அரசின் அறிவுறு த்தல்களை செயல்படுத்தாமல் இருப்பதை பா.ஜனதா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது சரியான நிகழ்வாக இல்லை.

மருத்துவ கல்வியில் 10 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு நிறை வேற்றப்படாமல் உள்ளது. இதில் காலதாமதம் ஏன் என முதல்-அமைச்சரும், கவர்னரும் தெரிவிக்க வேண்டும்.

தலைமைச் செயலாளர் டெல்லிக்கு சென்று இந்த கல்வி ஆண்டே மருத்துவ கல்வியில் 10 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி பெற்று அரசாணையை வெளியிட வேண்டும்

புதுவை நோணாங்குப்பம், தேங்காய்திட்டு ஆகிய பகுதிகளில் அரசுக்கு சொந்தமான ஆற்று படுகை, கடற்கரையோரங்களில் தனியார் சார்பில் எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் சுற்றுலா படகுகள் இயக்கப்படுகிறது. படகு விபத்தை தொடர்ந்து அதற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக காவல்துறை தெரிவித்து ள்ளது. அங்கு சுற்றுலா துறையே படகுகளை இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News