புதுச்சேரி

பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகளை வழங்கிய காட்சி.

பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகள்

Update: 2023-02-05 04:01 GMT
  • புதுவை அரசு வேளாண் துறை மதகடிப்பட்டு உழவர் உதவியகம் சார்பில் ஆத்மா திட்டம் மூலம் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.
  • கோழிகுஞ்சு வளர்ப்பு முறைகள், பாதுகாப்பு முறை குறித்து கோழிக் குஞ்சுகள் வளர்ப்பால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என சன்னியாசிக்குப்பம் பாலமுருகன் தெரிவித்தார்.

புதுச்சேரி:

புதுவை அரசு வேளாண் துறை மதகடிப்பட்டு உழவர் உதவியகம் சார்பில் ஆத்மா திட்டம் மூலம் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர் நடராஜன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகளை வழங்கினார்.

இதில் சன்னியாசிக்குப்பம் இந்திரா நகர் பகுதிகளை சேர்ந்த 20 பெண்கள் பயன் பெற்றனர்.

கோழிகுஞ்சு வளர்ப்பு முறைகள், பாதுகாப்பு முறை குறித்து கோழிக் குஞ்சுகள் வளர்ப்பால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என சன்னியாசிக்குப்பம் பாலமுருகன் தெரிவித்தார்.

இதற்கான ஏற்பாடுகளை தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி, விரிவாக்க பணியாளர் பக்கிரி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News