புதுச்சேரி

சித்தர் பூமி யோகாசன சங்க மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய காட்சி.

சித்தர் பூமி யோகாசன சங்க மாணவர்களுக்கு சான்றிதழ்

Published On 2023-08-09 13:31 IST   |   Update On 2023-08-09 13:31:00 IST
  • மாணவ-மாணவிகளுக்கு மெடல் அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
  • விழாவிற்கான ஏற்பாடுகளை சித்தர் பூமி புதுச்சேரி யோகாசன விளையாட்டு சங்கத்தினர் செய்திருந்தனர்.

புதுச்சேரி:

சித்தர் பூமி புதுச்சேரி யோகாசன விளையாட்டு சங்கம் யோகாசனா பாரத் தலைமையில் மாநிலஅளவி லான யோகாசனப் போட்டி புதுவை அய்யனார் நகரிலுள்ள யோகாஞ்சலி நாட்டியாலயத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மாநில அளவில் போட்டியில் கலந்துக் கொண்டனர். சப்.ஜூனியர், ஜூனியர், சீனியர், மற்றும் மாஸ்டர் பிரிவுகளில் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் தேசிய அளவில் நடைபெறும் யோகாசனப் போட்டியில் பங்கேற்பார்கள்.

நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மெடல் அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் சங்கத் துணைத் தலைவர் தேவசேனா பவனானி , செயலாளர் தயாநிதி, துணைச்செயலாளர் டாக்டர் பாலாஜி, பொருளாளர் சண்முகம் , உறுப்பினர்கள் லலிதா சண்முகம், மற்றும் ரீனா தயாநிதி கலந்துக் கொண்டு மாணவ-மாணவிகளை வாழ்த்தினார்.

விழாவிற்கான ஏற்பாடு களை சித்தர் பூமி புதுச்சேரி யோகாசன விளையாட்டு சங்கத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News