புதுச்சேரி

டெல்லியில் நடந்த சாலை போக்குவரத்து கூட்டத்தில் புதுவை அமைச்சர் சந்திரபிரியங்கா பங்கேற்ற காட்சி.

மத்திய அரசு திட்டங்களில் புதுவையை சேர்க்க வேண்டும்

Published On 2023-04-18 09:24 GMT   |   Update On 2023-04-18 09:24 GMT
  • புதுவை போக்குவரத்து அமைச்சர் சந்திரபிரியங்கா பங்கேற்றார்.
  • பேருந்துகளை மாற்றம் செய்வதற்கு கால அவகாசம் வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை போக்குவரத்து அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை கள் அமைச்சர் நிதின் கட்காரி தலைமையில் டெல்லியில் அனைத்து மாநில போக்குவரத்து அமைச்சர்கள் மாநாடு நடந்தது. இதில் புதுவை போக்குவரத்து அமைச்சர் சந்திரபிரியங்கா பங்கேற்றார்.

கூட்டத்தில் அமைச்சர் சந்திர பிரியங்கா பேசு ம்போது, புதுவை அரசின் பி.ஆர்.டி.சி.க்கு சொந்தமான பேருந்துகளை மாற்றம் செய்வதற்கு கால அவகாசம் வேண்டும். புதுவையின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி தொகுப்பில் புதுவைக்கும் ஒதுக்கீடு வழங்கி போதுமான பஸ்கள் வழங்க வேண்டும்.

 புதிய விதியின் கீழ் சுற்றுலா பர்மிட் வழங்குவதில் உள்ள இடர்பாடுகள், சாலைப் பாதுகாப்பிற்கு மத்திய அரசு மூலம் தனி நிதி ஒதுக்கீடு, மின்னனு வாகனப் பயன்பாட்டிற்கான ஊக்கத்தொகை வழங்கும் மத்திய அரசின் திட்டத்தில் புதுவையை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு சந்திர பிரியங்கா பேசினார்.

Tags:    

Similar News