புதுச்சேரி

கோப்பு படம்.

மயான கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்-சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை

Published On 2023-03-21 04:48 GMT   |   Update On 2023-03-21 04:48 GMT
  • முதலியார்பேட்டை தொகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.
  • ஏழைகள் அந்த நேரத்தில் பணம் இல்லாமல் தவிக்கின்றனர்.

புதுச்சேரி:

புதுவை சட்டடசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் பேசியதாவது:-

வேல்ராம்பட்டு ஏரி ஒப்பந்தத்தை ரத்து செய்து ஏரியை காப்பாற்ற வேண்டும். முதலியார்பேட்டை தொகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.

இயற்கை பேரிடர் காலங்களில் அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இறந்தவர் உடலை அடக்கம் செய்ய பணம் முக்கிய தேவையாக உள்ளது. ஏழைகள் அந்த நேரத்தில் பணம் இல்லாமல் தவிக்கின்றனர். எனவே மயான வசூலிக்கும் கட்டண தொகையினை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

அரசு மருத்துவ மனைகளில் இருதய அறுவை சிகிச்சை 2 வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கிறது. தினமும் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.சிடி ஸ்கேன் எந்திரம் மேலும் 2 வாங்க வேண்டும்.

நீரழிவு நோயாளிகள் போடும் இன்சுலின் ஊசியின் பருமனை மாற்ற வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேலும் ஒரு டாக்டரை பணியமர்த்த வேண்டும். முதலியார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை புனரமைக்க வேண்டும்

இவ்வாறு சம்பத் பேசினார்.

Tags:    

Similar News