புதுச்சேரி

கடற்கரை சாலை போர் நினைவு சின்னத்தில் தேசிய மாணவர் படையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய காட்சி.

தேசிய மாணவர் படை தினம் அனுசரிப்பு

Published On 2023-11-26 06:46 GMT   |   Update On 2023-11-26 06:46 GMT
  • தேசிய மாணவர் படை தினம் நவம்பர் 26-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
  • மாணவர் படையின் கொடி அணிவகுப்பு நடந்தது.

புதுச்சேரி:

தேசிய மாணவர் படை தினம் நவம்பர் 26-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது. புதுச்சேரி கடற்கரையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் நடந்த தேசிய மாணவர் படை தினத்தை யொட்டி நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு ராணுவம், கப்பல் படை, விமானப்படை மற்றும் புதுச்சேரி போலீஸ் சார்பில் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தினர். முன்னதாக தேசிய மாணவர் படையின் கொடி அணிவகுப்பு நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை விங் கமாண்டர் ஜனார்த்தனன், லெப்டினன்ட் கர்ணல் ஏ.எஸ்.காங்ரோட், நேவல் கமாண்டிங் அதிகாரி லோகேஷ், மாணவியர் பிரிவு ஜூனியர் கமிஷன் ஆபீஸர் சீனிவாசலு, இன்டப் ஜூனியர் கமிஷன் ஆபிஸர் சுஷில்குமார், விமானப்படை ஜெ.டபிள்யு.ஓ. சிவக்குமார், கப்பல் படை பைலட் அதிகாரி பிரேம் மற்றும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவர்கள் மலர் வளையம் வைத்து வீர வணக்க அஞ்சலி செலுத்தினர். 

Tags:    

Similar News