புதுச்சேரி

விழாவில் சிறப்பாக செயல்பட்ட புதுவை மாநில நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணராஜிக்கு அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், ஜான்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டிய காட்சி.

நுகர்வோர் நீதிமன்றத்துக்கு வரும் வழக்குகளை 90 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்-அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் வேண்டுகோள்

Published On 2022-12-25 11:04 IST   |   Update On 2022-12-25 11:04:00 IST
  • புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினவிழா காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.
  • விழிப்புணர்வு இதுபோன்ற விழா வரும் காலங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரி:

புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினவிழா காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஜான்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். குடிமைப்பொருள் வழங்கல்துறை இயக்குனர் சக்திவேல் வரவேற்று பேசினார். மாநில நுகர்வோர் ஆணைய தலைவர் பொங்கியப்பன், அரசு செயலாளர் உதயகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

விழாவில் அமைச்சர் சாய்.ெஜ.சரவணன்குமார் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட தன்னார்வல அமைப் புகளை சேர்ந்தவர்களை கவுரவித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

விழிப்புணர்வு இதுபோன்ற விழா வரும் காலங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாம் வாங்கும் பொருட்கள் தரமானதாக இருக்கவேண்டும். தரமற்றதாக இருந்தால் அதற்கு தண்டனை வழங்க நுகர்வோர் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நுகர்வோர் நீதிமன்றத்துக்கு வரும் வழக்குகளை 90 நாட்களுக்குள் முடிக்கவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பேசினார்.

விழாவில் மாநில நுகர்வோர் ஆணைய உறுப்பினரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுந்தரவடிவேலு, குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள், தன்னார்வல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண் டனர். முடிவில் துணை இயக்குனர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News