பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் கேன்சர் சிகிச்சை குறித்த கருத்தரங்கம் நடந்த போது எடுத்த படம்.
பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் கேன்சர் சிகிச்சை கருத்தரங்கம்
- பிம்ஸ் மருத்துவ கல்லுாரி முதல்வர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார்
- மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட முதுகலை, இளங்கலை மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
பிம்ஸ் மருத்துவ கல்லுாரி யில் கேன்சர் சிகிச்சை முறையில் தற்போதைய மற்றும் எதிர்கால நவீன சிகிச்சை முறைகள் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
பிம்ஸ் விஞ்ஞான சங்கம் மற்றும் குளோபல் ஹெல்த் சிட்டி சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு, பிம்ஸ் மருத்துவ கல்லுாரி முதல்வர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார். பிம்ஸ் மருத்துவ கல்லூரி விஞ்ஞான சங்க அமைப்பு செயலர் சஜீவ் முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில் கேன்சர் நோய் குறித்த நவீன சிகிச்சை முறை மற்றும் 'ரோபோட்டிக் சர்ஜரி' என்ற அதி நவீன இயந்திரங்கள் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையில் 'மருத்துவர்களின் பங்கு' குறித்து கருத்தாய்வு செய்யப் பட்டது. கருத்தரங்கில் சென்னை குளோபல் சிட்டி கேன்சர் மருத்துவ நிபுணர் ராஜசுந்தரம், ராம் பிரபு ஆகியோர் கேன்சர் நோய் சிகிச்சை முறை குறித்து பல்வேறு தலைப்புகளில் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சி நடந்தது. இதில் மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன், சென்னை குளோபல் ஹெல்த் சிட்டி சிறப்பு மருத்துவர்கள் தீபா, அரவிந்த் மாதுரி உள்ளிட்ட பல்வேறு மருத் துவ கல்லூரிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட முதுகலை, இளங்கலை மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.