புதுச்சேரி

கோப்பு படம்

பூங்கா- குளங்களை பராமரிக்க தன்னார்வலர்களுக்கு அழைப்பு

Published On 2023-08-22 11:23 IST   |   Update On 2023-08-22 11:23:00 IST
  • உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
  • கல்வி நிறுவனங்கள், வங்கிகள், நல்வாழ்வு சங்கங்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.

புதுச்சேரி:

உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உழவர்கரை நகராட்சியில் பூங்கா, குளங்கள், பொது கழிப்பறைகளை பராமரித்தல் போன்ற நலப்பணிகளுக்கு தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள், தொழில் வியாபார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வங்கிகள், நல்வாழ்வு சங்கங்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.

இவற்றை பராமரிக்கும் உபகரணங்கள், பராமரிப்பாளர்களின் உதவித் தொகை ஆகியவற்றை தாங்களாக செய்யலாம். பொதுநலப்பணியில் பங்கேற்க விரும்புவோர் உழவர்கரை நகராட்சி தொலை பேசி எண் 0413 2201142, செயற்பொறியாளர் எண் 94433 71672, நகராட்சி சுகாதார அதிகாரி 94439 60447 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News