புதுச்சேரி

ரத்ததானம் செய்த தன்னார்வலர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கிய காட்சி.

ரத்ததானம்-இலவச கண்பரிசோதனை முகாம்

Published On 2023-09-25 08:16 GMT   |   Update On 2023-09-25 08:16 GMT
  • முதல்-அமைச்சர் ரங்கசாமி சான்றிதழ் வழங்கினார்
  • ஜோதி கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

புதுச்சேரி:

புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ். 7 நாள் சிறப்பு முகாமில்

என்.எஸ்.எஸ். உதய தினத்தையொட்டி பள்ளி நாட்டு நலப் பணித்திட்டமும் மற்றும் ஜிப்மர் ரத்த வங்கியும் இணைந்து ரத்ததான முகாம் மற்றும் ஜோதி கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி, உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவருமான நேரு ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். மேலும் ரத்த தானம் செய்த தன்னார்வலர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தனர். மாநில அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கி ணைப்பாளர் சதீஷ்குமார், பள்ளி அளவிலான நாட்டு நல பணித்திட்ட ஒருங்கி ணைப்பாளர் மதிவாணன், ஜிப்மர் ரத்த வங்கி டாக்டர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுவை மாநில கோஜுரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் வரவேற்றார்.

நிகழ்ச்சியின் ஏற்பாடு களை பள்ளியின் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் ஜெயந்தி, பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் செய்திருந்தனர்.

Tags:    

Similar News