கோப்பு படம்.
புதுவையில் அதிகரித்து வரும் பைக் திருட்டு
- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
- மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றது தெரியவந்தது. இது சம்பந்தமாக பெரிய கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில மாதங்களாக வாகன ங்கள் திருடு போவது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து போலீசார் பல நடவடிக்கைகள் எடுத்தாலும் வாகன திருட்டை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
பைக்குகள் மற்றும் கார்கள் அடிக்கடி திருடப்படுகின்றன. இவற்றில் பைக்குள் மிக அதிக அளவில் திருடப்படுகிறது. புதுவை பூந்துறை ரோடு சிவாஜி நகரை சேர்ந்தவர் சுதாகர் (வயது 48). இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் தனது பைக்கை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். காலையில் வந்து பார்த்தபோது அவரது பைக் திருடு போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து தன்வந்திரி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதே போல் நெல்லித்தோப்பு பெரியார் நகரை சேர்ந்தவர் பாக்யராஜ் வயது 44 இவர் தனது பைக்கை பெரிய கடை பூ மார்க்கெட் அருகே நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அவர் நிறுத்தி இருந்த பைக்கை காணவில்லை. மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றது தெரியவந்தது. இது சம்பந்தமாக பெரிய கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் இரு போலீஸ் நிலைய போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் பைக் திருட்டால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.